சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

35

 

 • இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன.
 • ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.
 • ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல் அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
 • சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும், இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரர்களுக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன்.
 • தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
 • புயலாக எழுந்த பேராபத்துக்களை எல்லாம் மலையாக நின்று எதிர்கொள்ள, இரும்பையொத்த மனவுறுதி எனக்குத் தேவைப்பட்டது. இந்தச் சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் கட்டங்களில் எனக்குப் பக்கபலமாக – மனித மலைகளாக – உறுதியோடு நின்ற மாவீரர்களை, நான் என்றும் மறக்க முடியாது. இந்த இலட்சிய வேங்கைகளில் தளராத உறுதிதான் எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாக நிற்கின்றன.
 • இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும், எதையும் தாங்கும் இதயத்துடனும், சாவுக்கு அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் போராடினார்கள் போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.
 • எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
 • எமக்கு ஒரு நாடு வேண்டும் – எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் – எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் – என்ற ஆக்கிரோசமான இலட்சிய வேட்கையுடனே, மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள் எனவே எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.
 • எமக்கு ஒரு நாடு வேண்டும் எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கிறது.
 • எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.
 • எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்காமன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக் கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.
 • எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.
 • எமது வீர சுதந்திர வரலாறு மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும், கண்ணீராலும் எழுதப்பட்டிருக்கின்றது.
 • ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எமது மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில். அந்தத் தியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அந்தப் புனிதர்களை எண்ணும் போதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும்.
 • சத்தியத்திற்காகச் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும்.
 • தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது; அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன்,மலையாக எழுந்து நிமிர்ந்தான் அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
 • நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
 • மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகின்றேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை; சரித்திரமாகி விட்டார்கள்.
 • இந்த மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் தமது உயிருக்கு மேலாக தாய் நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும். உங்களது குழந்தைகள்சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள்.
 • மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல் நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோகதினமும் அல்ல. இன்றைய நாள்,ஒரு தேசிய எழுச்சி தினம் எமது தேசம் சுதந்திரம்வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம்.
 • மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை – அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள், ஏக்கங்கள்,அவர்கள் கண்ட கனவுகள் – இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது.
 • மாவீரர்களின் சாவுகள், எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக – எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக – எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக – அமைந்துவிட்டன.
 • மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது.
 • மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல் எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.
 • மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.
 • மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள் தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தம் உயிரிலும் மேலாக நேசித்தவர்கள் மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக்கொண்டவர்கள் அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.
 • மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை; அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
 • எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள் அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.
 • மாவீரர்களே எமது மண்ணின் காப்பரண்கள் எமது மக்களின் காவற்தெய்வங்கள்.
 • விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம் நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம் தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.
 • போராளிகள், தனிமனிதர்கள் அல்ல, அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள் ஒரு புதியவரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநினைவுகள் அல்ல, இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்த தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக் கொண்டேயிருக்கும். மாவீரர்களின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்றும் நெருப்புக்கிடங்குகள் ஆகும்.
 • இது கரும்புலிகள் சகாப்தம். இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க்கோலம் பூண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்.
 • கப்டன் மில்லலருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது என்றுமே உலகம் கண்டிராத – எண்ணிப் பார்க்கவும் முடியாத – தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது.
 • கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்தபரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும் பார்வைக்குப் புலப்படாத, பூடகமான, இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே, கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிமமாக அமையப்பெற்றிருக்கின்றது.
 • கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழுடன் வாழும்.
 • கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப்பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
 • பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே, கரும்புலிகளை நான் உருவாக்கியுள்ளேன்.
 • மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்.
 • கரும்புலி வீரர்கள் பற்றி இன்று முழு உலகமும் பேசுகிறது. அவர்களது மகத்தான தியாகத்தைக் கண்டு மலைத்துப் போய்நிற்கிறது. பூகம்ப அதிர்வாகக்குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயத்திற்கு உணர்த்தியவர் கரும்புலிகள்.
 • ஒரு கரும்புலி வீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக்கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்த குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன்பற்றியது, நல்வாழ்வு பற்றியது.
 • கரும்புலிகள் வித்தியாசமானவர்கள், அபூர்வமான பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் ஆகாண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக்காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
 • அறிவின் அதி உயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை; தன்னலமும் தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகிறது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகிறது.
 • இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும் சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.
 • இளமையிலிருந்துதான் ஒருவனை முழுமையாக வளர்க்க முடியும். முழுமை எனும் பொழுது அறிவும், ஆற்றலும், அறநெறிப் பண்புகளும் கொண்ட நிறைவான மனித வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றேன்.
 • எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே, எமது கல்விவாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
 • எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
 • எமது பண்பாடுதான் எமது தேசத்தின் உயிர் எமது இனத்தின் ஆன்மா.
 • எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஸ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.
 • எமது மொழியில், எமது கலைகளில், எமது பண்பாட்டில், எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும் நேசமும் தேசியப் பற்றுணர்வாகப் பரிணாமம் பெறுகின்றன.
 • எமது மொழியும் – கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றில், விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்பவை.
 • எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாகநிற்க வேண்டும்.
 • கலாசாரம் உயர்நிலை எய்தும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகின்றது; மனிதவாழ்வு உன்னதம் பெறுகின்றது. மனிதம் வளர்ச்சி பெறுகின்றது.
 • கலாச்சாரம் என்ற கோலத்தில் எமது சமூக வாழ்வில் ஊடுருவி நிற்கும் பிற்போக்கான பண்புகளை, வழக்குகளை, கருத்தோட்டங்களை நாம் இனங்கண்டு களைதல் அவசியம்.
 • கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
 • கலைத்துறையில் சர்வாதிகாரம் இருக்கக்கூடாது; அப்படி இருந்தால் அது வளராது.
 • கல்வி எனும் மூலாதார உரிமையைப் பறித்தெடுத்து, தமிழீழத்தின் கல்வித்துறையைச் சிதைத்துவிட, சிங்களப் பேரினவாதம் நீண்டகாலமாகவே முயன்று வருகின்றது.
 • கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.
 • கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்.
 • காலத்தின் மூச்சாக வாழ்வியக்கம் அசைகின்றது. அந்தக் காலத்தையும் அந்த வாழ்வாக அவிழும் மனித இன்னல்களையும் விளைச்சல்களையும் நுட்பமாகச் சித்திரிக்கும் கலை – இலக்கியங்கள் உன்னதமானவை.
 • சமூகப் புரட்சி என்பது கலாசார மறுமலர்ச்சியை உள்ளடக்கக்கூடியதாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
 • தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயரிய நோக்குகளையும் இலக்குகளையும் மாணவசமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து, மாணவரிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரிய சமூகம் முயற்சிக்க வேண்டும்.
 • தான் பிறந்த மண், தான் வாழ்ந்த சூழல், தான் வாழும ;காலம் என்ற ரீதியில் வாழ்க்கையே ஒரு கலைஞனது படைப்புத்தளமாக அமைகின்றது; வாழ்வின் புறநிலை உண்மைகளை மூலப்பொருளாக எடுத்து கலைப்பொருள் படைப்பவனே சிறந்த கலைஞன்.
 • நான் கலை இலக்கியங்களை மதிப்பவன் கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன் கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.
 • நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருந்தால்தான், கல்வி உட்பட சகல சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச்செல்ல முடியும்.
 • பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை – கலாச்சாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும் எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றிவிக்கும்.
 • பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை, கலாசாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும், எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும்.
 • போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
 • மக்களிடையே விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும், விடுதலை உணர்வையும் தூண்டிவிடும் கலை இலக்கிய ஆக்கங்களே எமது இலட்சியப் போருக்கு உரமேற்றுவதாக அமையும் இத்தகைய கலை – இலக்கியப் படைப்புக்களே தேசிய எதிர்ப்பியக்கத்திற்கு உரமூட்டுவதாக அமையும்.
 • மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன் ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன் ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன.
 • மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது; (பலம் பெறுகின்றது) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.
 • விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
 • எதிரியின் அழிப்பு வேலைகளுக்கு மத்தியில் நாம் ஆக்க வேலைகளைச் செய்து வருகின்றோம். போர்ச்சூழலால் குடும்பம் சிதைந்து, அநாதரவான நிலைக்கு ஆளாகும் சிறார்களை எமது இயக்கம் அரவணைத்துக் கொள்கிறது. அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்தெடுக்கப் பராமரிப்பு இல்லங்களையும், பயிற்சிப் பள்ளிகளையும் நடத்தி வருகிறது தமிழீழத்தின் எதிர்காலத் தலைவர்களாக, அறிவிஜீவிகளாக, சமூக நிர்மாணிகளாக இவர்களை வளர்த்தெடுப்பதே எமது நோக்கம்.
 • அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால், எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்.
 • அரசியல் என்பது மக்கள்மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.
 • இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது.
 • இன அழிவில் இருந்து எமது மக்களைப் பாதுகாத்து தேசிய சுதந்திரத்தை முன்னெடுப்பதாயின், எமது தாய்ப்பூமியை ஆக்கிரமித்திருக்கும் எதிரிப் படைகளை விரட்டியடிக்க வேண்டும். இந்தக் கைங்கரியமானது தீர்க்கமான, திட்டமிடப்பட்ட ஆயுதப் போராட்டத்திலும் எமது மக்களின் ஏகோபித்த பங்களிப்பிலும் தங்கியிருக்கிறது.
 • இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
 • இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.
 • இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் போராடித் தமிழீழம் பெறுவார்கள் என்ற வகையில் நாம் சும்மா இருந்துவிட்டால், எமக்குச் சுதந்திரம் கிடைக்காது. பொதுமக்களாகிய உங்களின்நேரடிப் பங்களிப்பின்றி எமது தேசிய சுதந்திரப் போராட்டம் வெற்றியளிக்கப்போவதில்லை.
 • ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விடுதலை வேங்கைகளாக வீரப்புலிகளாக – மாறவேண்டும் தாழ்ந்துபோன தமிழினம் வீரப்புலி இனமாக மாறவேண்டும்.
 • உண்மையில் எமது மக்களின் பாரிய உயிரிழப்பிற்கும் அவர்களின் உடமை நாசத்திற்கும், சிங்கள ஆளும்வர்க்கத்தின் இனவெறி பிடித்த, தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
 • உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே.
 • உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு தேசத்தின் ஜீவாதாரசக்தி.
 • எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள் எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான – பிற்போக்கு – சக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
 • எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக, நேர்மையும் – கண்ணியமும் மிக்கவர்களாக, ஒரு புதிய – புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும் இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.
 • எமது மக்கள் சிங்கள இனவாத அடக்குமுறையின் அக்கினிப்பட்டறையில் புடம்போடப்பட்டவர்கள் அரசியல் பயங்கரவாதத்தில் அகோரங்களைச் சந்தித்தவர்கள் துன்பச் சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள் மரணத்தின் நிழலில் படுத்துறங்கி வாழ்பவர்கள்.
 • எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம்: கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது கதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
 • எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும் இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும்.
 • எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலை நாட்டும்வரை நாம் ஆயுதம் ஏந்திப் போரிடுவதைக் கைவிடமாட்டோம்.
 • ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும்.
 • ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலக தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.
 • ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போராட்டமாக, – தேசியப் போராட்டமாக, முழுமையும் – முதிர்ச்சியும் பெறுகின்றது; அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.
 • காலங்காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள் – சாவும் அழிவாக அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள் – சோகத்தின் சுமையால் அவர்கள் சிந்திய இரத்தக் கண்ணீர் – இவையெல்லாம் பௌத்த தேசத்தின் காருண்யத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.
 • காலங்காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள் – சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள் – சோகத்தின் சுமையால் அவர்கள் சிந்திய இரத்தக்கண்ணீர் – இவை பௌத்த தேசத்தின் காருண்யத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.
 • கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்.
 • சமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால், நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
 • சமூகநீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வரும்.
 • சாவுக்கும் அழிவுக்கும் அப்பால், பசிக்கும் பஞ்சத்துக்கும் அப்பால், சுயநல வாழ்வின் சுகபோகங்களுக்கும் அப்பால், ஒரு சுதந்திரமான – கௌரவமான வாழ்வில் காதல்கொண்டு நிற்கும் எமது மக்களின் இலட்சியப்பற்றை நான் பாராட்டுகின்றேன்.
 • சுதந்திரப் பசியில் உறுதிபூண்ட மக்களை சோற்றுப் பசி தீண்டிவிடப் போவதில்லை.
 • சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம், பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் அத்தகைய இனத்தால்தான் சுதந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.
 • தமிழீழப் பாட்டாளி வர்க்கமானது, ஒருபுறம் முதலாளித்துவ சுரண்டல் முறையையும் மறுபுறம் இனவாத ஒடுக்குமுறையையும் சந்தித்து நிற்கின்றன.
 • தமிழ் மக்களாகிய நாம் ஒரு தேசியக் கட்டமைப்பைக் கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக நாம் ஒரு தேசியமாகவே வாழ்ந்து வந்தோம் தேசியமாகவே வாழ்ந்து வருகின்றோம் தேசியமாகவே வாழப்போகின்றோம்.
 • தமிழ் மக்களின் போராட்டம் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம்.
 • தார்மீக அடிப்படையில், நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது: சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் தனியரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.
 • தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான், ஒரு தேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ஆளுமையைப் பெறுகின்றது. இந்தத் தேசிய ஆளுமையைக் கொண்ட மக்கள் இனம்தான் ஒரு அரசை அமைத்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கின்றது.
 • தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான் ஒரு தேசம் தனக்கே உரித்தான – தனித்துவமான – ஆளுமையைப் பெறுகின்றது.
 • நாம் ஒன்றுபட்ட மக்களாக – ஒரே தேசிய சக்தியாக – அணிதிரண்டு, எமது எதிரியின் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
 • நாம் ஒரு சத்திய இலட்சியத்தில் பற்றுக்கொண்டு உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால், எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது.
 • நாம் தர்மத்திற்காக – தன்மானத்திற்காக – சுதந்திரத்திற்காக – ஆயுதமேந்தி வருகின்றோம். எமது இலட்சியப் பயணமும், அதற்காக நாம் புரிந்துவரும் உன்னத தியாகங்களும் மக்களுக்குப் புரியும் ஆதலால்தான் அவர்கள் எம்மை அரவணைத்துக் கொள்கின்றார்கள்.
 • நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும் பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்.
 • புயலாகச் சீண்டும் எதிரியின் அடக்குமுறை அழுத்தங்களை எல்லாம் மலையாகத் தாங்கி நிற்கும் எமது மக்களை நான் பாராட்டுகின்றேன்.
 • பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கிநிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப்பெரும்பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டுமொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின.
 • மக்களின் ஆதரவுடன் மக்களின் மேம்பாட்டிற்காக நிகழ்த்தப்படும் சமூக சீரமைப்புகளே, நிரந்தரமானதாக நிலைத்து நிற்கும்.
 • மக்களின் உறுதிப்பாடு, சர்வதேச ஆதரவு, மற்றும் சூழ்நிலைகள்தான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன.
 • மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, அவர்களின் கஸ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
 • மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்துகொள்வார்கள்.
 • மக்கள் மத்தியில் விரக்தியும், சோர்வும் குழப்பமும், நம்பிக்கையின்மையும் தோன்றும்பொழுது ஒரு தேசத்தின் போராட்ட சக்தி வலு இழக்கின்றது.
 • மனித உரிமைக்கும் மனித நீதிக்கும் சமாதானத்திற்கும் குரலெழுப்பும் இந்த உலகமானது, உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதான வழியில் தீர்வுகேட்டு நிற்கும் எமது மக்களிற்குச் சார்பாகக் குரலெழுப்ப வேண்டும் இதுவே உலகத்தின் இன்றைய தார்மீகக் கடப்பாடு ஆகும்.
 • மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை, எந்தப்புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.
 • விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத் தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தேசியச் சுமையைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது, நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.
 • விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இராது, நேரடிப் பங்காளிகளாக மாற வேண்டும்.
 • விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் போராட்டம். பரந்துபட்ட வெகுசனங்கள் ஒன்றுதிரண்டு, ஒரு ஐக்கிய தேசமாக எழுச்சிகொண்டு போராட்டத்தில் பங்களித்தால்தான், எமக்கு வெற்றி நிச்சயம்.
 • விடுதலையை வேண்டிநிற்கும் ஒரு தேசிய சமுதாயத்தின் உறுதிப்பாட்டை, எந்தவொரு சக்தியாலும் அழித்து விடமுடியாது.
 • வீரசுதந்திரம் வேண்டிநிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.
 • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய தமிழர்களின் சரித்திரத்தில் போருக்குப் புறப்பட்டுப்போன ஆண்களை, வீட்டிலிருந்து தாய்மார்கள்- பெண்கள் – வழியனுப்பிவைத்தார்கள், ‘சென்று வா மகனே! வென்று வா!; ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்திய தமிழர்களின் இன்றைய சரித்திரத்தில், போருக்குப் புறப்பட்டுச் செல்கின்ற பெண்களாகிய உங்களை, எல்லாத் தாய்மாரினதும் சார்பில் நான் வழியனுப்பி வைக்கின்றேன், ‘சென்று வா மகளே! வென்று வா’
 • இந்திய வல்லாதிக்கத் தலையீட்டிற்கு ஒரு முடிவுகாணப்பட்டமை, எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கிட்டிய ஒரு மகத்தான வெற்றியாகும்.
 • எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகி விட்ட எமது தியாகிகளில், அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகின்றார்.
 • எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
 • ஒரு தேசிய விடுதலை இயக்கத்துடன் அணிசேர்ந்து கொள்வதன் மூலமே, தொழிலாள வர்க்கம் தேசியப் போராட்டத்திற்கு உருப்படியான முறையில் பங்களிக்க முடியும் இதுவே உழைக்கும் மக்களின் விடிவிற்கும் விமோசனத்திற்கும் வழிகோலும்.
 • ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது தேசத்தின் நலன் கருதி, எமது மக்களின் நல்வாழ்வு கருதி நாம் முற்போக்கான கொள்கைகளை வரித்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்தக் கொள்கைகளை மக்கள் பற்றிக்கொண்டு, அவற்றைச் செயற்படுத்த உறுதிபூண்டு, போராட்டத்தில் பங்கு கொள்ளும்பொழுதுதான் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்ல முடியும்.
 • ஒரு விடுதலைப் போராளியானவன் தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி, தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
 • குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி – தன்மானத்துடன் – வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
 • கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்.
 • தனது மனவுலக ஆசைகளிலிருந்தும் – அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.
 • நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச் சின்னம்தான் ‘சயனைட்’. இந்த ‘சயனைட்’ எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
 • நாம் எதனை கேட்கிறோம். எதற்காக நாம் போராடி வருகிறோம். நாம் எமது மண்ணில் வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில் நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில் நாம் நிம்மதியாக கௌரவமாக, எவரது தலையீடுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம். நாமும் மனிதர்கள், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துகொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.
 • மூன்றாம் உலகில், ஒடுக்கப்படும் இனங்களுக்கும் அடக்கப்படும் மக்களுக்கும் எமது புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக – வழிகாட்டியாக – அமைந்திருக்கின்றது.
 • விடுதலைவீரனின் சுயநலமற்ற – பற்றற்ற – வாழ்க்கை உன்னதமானது அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத்துணிகிறான்.
 • அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம் அறவழியைத்தழுவி நிற்கிறது. அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வடிவிலும் சரி, தமிழர் வரித்துக்கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக பலமாகவும் இருந்து வருகிறது.
 • இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை; கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.
 • எதிரியின் அழிவில்தான் எங்களது வெற்றியே தங்கியுள்ளது. எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கும் எதிரி வீரன் வீழ்த்தப்படும்வரை நாங்கள் உயிரிழந்து கொண்டிருப்போம். எனவே எதிரியின் அரண்களுக்குள் வேகமாகச் செல்லுங்கள் முடிந்தவரை விரைவாக எதிரிகளை வீழ்த்துங்கள் அதன் மூலம் வெற்றியைப் பெறுங்கள்.
 • எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுதத்தாக வரலாறு இல்லை; அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.
 • எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும், நம்பிக்கையும், உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு.
 • எமது தன்னாட்சி உரிமைப் போhராட்டம் தமிழீழத் தனியரசை நிறுவும் இலட்சியத்தைக்கொண்டது. இந்தத் தனியரசை நிர்மாணிப்பதற்கு, ஒரு தன்னிறைவான பொருண்மியக் கட்டமைப்பு அவசியம்.
 • எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
 • எமது போராட்டம் அடக்கப்படும் – ஒடுக்கப்படும் – பல தேசிய இனங்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு, வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
 • எமது போராட்டம் தேசவிடுதலையை மட்டும்நோக்கமாகக் கொண்டதல்ல் தேசத்தின் விடுதலையுடன் சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டே நாம் போராடி வருகின்றோம்.
 • எமது போராளிகளின் தனிப்பட்ட நேர்மை – ஒழுக்கம் – வழிகாட்டும் வகையில் வாழும் வாழ்க்கை – இவையே மக்கள் எம்மீது மரியாதை வைக்கக் காரணமாகும்.
 • எமது போராளிகளின் வீரமும் – உறுதியும் – அதற்கு மேலாக எமது மக்களின் ஆதரவும் – ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்கும் துணிவை எமக்குத் தந்தன.
 • எமது போராளிகள் குடும்பத்தைத் துறந்து, கல்வியைத் துறந்து,இளமையின் இன்பங்களைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் துச்சமாக மதித்து போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றார்கள். இவர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது சிங்கள அரச பயங்கரவாதமேயன்றி வேறொன்றுமல்ல.
 • எமது விடுதலை இயக்கம் மிகவும் நீண்ட – கடினமான – நெருக்கடிகள் நிறைந்த – ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றது. உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை – சோதனைகளை – எதிர்பாராத திருப்பங்களை – இந்த வரலாற்று ஓட்டத்தில் நாம் எதிர்கொண்டோம்.
 • ஒரு விடுதலை இயக்கத்துக்குப் பின்னால் மக்கள் அணிதிரண்டு,அந்த இயக்கத்தின் இலட்சியத்தில் பற்றுக்கொண்டு, போராட்டத்தில்பங்கு கொள்ளும்பொழுதுதான் விடுதலை சாத்தியமாகிறது.
 • ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக – விமோசனத்திற்காக – வாழ்பவன். சுயநலமற்ற – பற்றற்ற – அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தம் நிறைந்தது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான் எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள் அசாதாரணமான பிறவிகள்.
 • ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது; இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
 • ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது; பலநெருக்கடிகளை எதிர்கொள்கின்றது; கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கின்றது.
 • ஓயாத புயலாக ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவம் விடுதலைப்பாதையில் எம்மைத் தள்ளிவிட்டது. இன அழிப்பின் தாங்கமுடியாத நெருக்குவாரங்களின் விளைவாக, நாம் ஒரு விதி செய்துகொண்டோம். எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கத் தீர்மானித்தோம் விடுதலைபெற்ற மனிதர்களாக வாழ்வதற்கு நாம் முடிவுசெய்துகொண்டோம்.
 • கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம் நீண்ட – ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.
 • சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே எமது போராட்ட இலட்சியம்.
 • செல்லுங்கள் – வீழ்த்துங்கள் – வெல்லுங்கள் இதுதான் போரின் உண்மைத் தார்ப்பரியம்.
 • தனது தியாகத்தால் இந்த மண்ணுக்கு விடுதலை கிடைக்குமாக இருந்தால், அந்தச் சாவு இந்த விடுதலைப் போராட்டத்தை உந்தி முன் தள்ளுமாக இருந்தால், அந்தச் சாவை அணைத்துக்கொள்ள எமது போராளிகள் போட்டியிடுவார்கள்.
 • தமிழீழ சுதந்திரப் போர் இன்று, ஆசியக் கண்டத்தில் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழை அடைந்திருக்கின்றது.
 • தமிழீழ மண்ணில் ஆயுதப் புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்திரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீர வரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கிறது.
 • தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு தேசிய மக்கள்படையாக நாங்கள், எங்கள் போரை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
 • தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான், திலீபன் செய்திருக்கிறான்.
 • திலீபனின் தியாகம், காந்தியின் அறக்கோட்பாட்டிற்கு ஒரு மகோன்னதமான செயற்பாட்டு வடிவம் கொடுத்தது.
 • இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை; காலத்தா சாகாத வரலாற்றுப் புருஷனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
 • திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
 • தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக – வழிகாட்டியாக – திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
 • நாங்கள் ஒரு உன்னத இலட்சியத்திற்காகப் போராடி வருகிறோம். அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும் வாழ்வதும் எங்களுக்குப் பூரண ஆத்ம நிறைவைத் தருகின்றது.
 • நாம் உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம் எமது தாயகபூமியை எதிரியிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திரத் தமிழீழம் அமைக்கும்வரை, நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
 • நீண்டதும் – கடினதுமான பெரும் போரில் நின்று தாக்குப்பிடிப்பதற்கும் படை நடாத்துவதற்கும், கடுமையான உடல் – உளப் பயிற்சிகள் அவசியம். அதேசமயம் எதிரியின் பலத்தையும் – பலவீனத்தையும் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப விதத்தில் அவனை வெற்றிகொள்வதற்குத் தேவையான தந்திரங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டும். பயிற்சியும் தந்திரமும் இருத்தல் மட்டும் போதாது; அதனை நடைமுறைப்படுத்தும் துணிவும் தேவை.
 • நீண்டதும் – கடினமானதும் – அபாயகரமானதுமான தமிழீழ யுத்தத்தில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை,இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது.
 • பயிற்சி – தந்திரம் – துணிவு – இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப்பெறுமாயின் வெற்றி நிச்சயம்.
 • பிரிவினைவாதம்’ என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள் போராட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம்.
 • பூரண அரசியற் தெளிவும் – விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.
 • மிகவும் கடினமானதும் – மிகவும் சாதுரியமானதும் – மிகவும் ஆபத்து நிறைந்ததுமான வேவுப்பணியில் ஈடுபடும் போராளிகள் தரும் தகவல்களைக் கொண்டே, தாக்குதல் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன் தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்த முடிகின்றது. வேவுவீரர்களின் துணிகர சாதனைகள் மூலமே நாம் பூநகரியில் பெரும் சமர் புரிந்து வெற்றியீட்ட முடிந்தது.
 • விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை; வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.
 • விடுதலைக்காக, எமது தேசம் மதிப்பிடமுடியாத பெரு விலையைக் கொடுத்திருக்கிறது; விடுதலைக்காக, இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது; விடுதலைக்காக, இந்தப் பூமிரணகளமாக மாறியிருக்கிறது; விடுதலைக்காக, எமது வீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
 • விடுதலைப் புலிகளின் மனோதிடத்தையும் உறுதியையும் அழித்து விட சிங்கள இராணுவத்தால் முடியாது. மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும், உன்னத இலட்சியப் பற்றும் எங்களுக்கு உண்டு.
 • விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல்விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்.
 • விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது.
 • விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்.
 • விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை.
 • வீழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகிப் போனதால்தான் விடுதலைப் போர் இன்றும் தொடர்கின்றது.
 • வேவுப்பணியில் ஈடுபடும் போராளிகளின் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து நிறைந்தது; உயிருக்கு உத்தரவாதமில்லாதது. இந்தப் பணியின்போது எத்தனையோ அற்புதமான போராளிகளை நாம் பறிகொடுத்துவிட்டோம். இந்த அர்ப்பணிப்புகளின் பயனாகவே நாம் போர்முனைகளில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடிகின்றது.
 • இந்தியாவின் இராணுவத் தலையீடும், ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையும், பயமுறுத்தல்களும் தென்னாசியாவின் சிறிய – பலங்குன்றிய – நாடுகளின் சமாதானத்திற்கும் ஸ்திர நிலைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.
 • இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம்.
 • உலகவரலாற்றில் எங்கும் எப்பொழுதும் – நிகழாத அற்புதமான தியாகங்களும் – அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.
 • சமூக உறவுகளில் அடிப்படையான மாற்றத்தை நிகழத்துவதன் மூலமே, சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை வடிவங்களை ஒழித்துக்கட்டி, சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலை நிறுத்த முடியும்.
 • சமூக மாற்றத்திற்கு முதற்படியாக சமூக விழப்புணர்வு அவசியம்.
 • சுதந்திரம்தான் மனித வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றது: முழுமையைக் கொடுக்கின்றது.
 • தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.
 • நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள்நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும்போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும் ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.
 • நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது.
 • நாம் தனித்துநின்று இந்தியத் தலையீட்டை எதிர்த்தோம் நாம் தனித்துநின்று உலகின் மிகப் பெரிய இராணுவத்தை எதிர்த்தோம் நாம் தனித்துநின்று எமது தேசிய சுதந்திரத்தீயை அணையவிடாது போராடினோம் இறுதியில் நாம் வெற்றிகொண்டோம். இந்த வெற்றிக்குக் காரணம் எமது மனந்தளராத உறுதி; சாவுக்கு அஞ்சாத எமது வீரம் சத்தியத்திலும் தர்மத்திலும் எமக்குள்ள நம்பிக்கை.
 • அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட, பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
 • அரசியல் விடுதலை என்ற எமது குறிக்கோளுடன் பொருளாதார விடுதலையும் ஒன்றிணைந்து நிற்கிறது. நாம் நிர்மாணிக்கப்போகும் நாடு, தங்குநிலையற்றதாக, தன்காலில் தரித்துநின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமையப் பெறவேண்டும் அதற்கான அத்திவாரத்தை நாம் கட்டியெழுப்பவேண்டும்.
 • அறப்போரிலும் சரி, ஆயுதப்போரிலும் சரி, எமது விடுதலைப்போர் உலக சாதனைகளைப் படைத்துவருகின்றது. மனித ஈகையின் சிகரத்தை எட்டியிருக்கின்றது.
 • அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.
 • ஆக்கிரமிப்பாளர்களின் சுவடுகளை இந்த மண் ஒரு பொழுதும் சுமந்துகொள்ளாது என்பதை, எதிரிக்கு நாம் நன்கு உணர்த்திவருகின்றோம்.
 • ஆயிரமாயிரம் போராளிகளின் அற்புதமான தியாகத்தில் உருவாகி வரும் எமது தாயகத்தை, ஒரு உன்னதமான – மேன்மையான – சமுதாயமாக மாற்றியமைக்க வேண்டும்.
 • ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல தந்திரங்களும் – உபாயங்களும் முக்கியம்.
 • ஆயுதப் போராட்டம் தோன்றி வளர்ந்த எதார்த்தப் புறநிலைகளை ஆராய்ந்து பார்த்தால் – அதன் காரணிகளை நீக்கிவிட உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் – ஆயுதப் பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும்.
 • ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன்.
 • இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை; ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது, மனித உரிமை, மக்கள் உரிமை என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார – வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கின்றன.
 • இந்த உலகில் அநீதியும் – அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.
 • இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஒரு சமாதான உடன்பாடு என வர்ணிக்க முடியாது; அது ஒரு யுத்த உடன்பாடு.
 • இந்திய – இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் – அதற்குத் தலைமை தாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக்கட்டுவதுதான், இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.
 • இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில்,வெற்றி – தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை: இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும் – துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
 • இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன், எமது போராட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது, ஒரு இருண்டு அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்.
 • இந்திய இராணுவம் ஒரு கையை பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிகூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது.
 • இந்தியாவின் இராணுவத் தலையீடும் அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவுகளும், தமிழீழ மக்களுக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது. அதாவது நாம் எந்த அந்நிய சக்திகளிலும் தங்கியிராது, எமது உரிமைகளை நாமே போராடிவென்றெடுக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பாடம்.
 • இன ஒடுக்குமுறையாலும், இராணுவ அடக்குமுறையாலும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்களுக்குத் தீர்வுகாண முடியாது.
 • இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக்கிடக்கும்வரை, தமிழரின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நீதியான – நியாயபூர்வமான – அரசியல் தீர்வை, நாம் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
 • இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.
 • இலங்கையில் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறு பான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது.
 • இழப்புகளுக்கு அஞ்சினால் யுத்தம் நடாத்த முடியாது; இழப்புகளை வளர்ச்சியின் ஊன்றுகோலாகக் கருத வேண்டும்.
 • இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம் சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புக்களும் – அழிவுகளும் எமது ஆன்மஉறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிடமுடியாது.
 • உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது; நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
 • உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.
 • உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும் தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை.
 • உலகில் எந்த ஒரு தேசிய சமுதாயமும் இரத்தம் சிந்தாமல், வியர்வை சிந்தாமல், அளப்பரிய தியாகங்கள் செய்யாமல், பேரழிவுகளைச் சந்திக்காமல் சுதந்திரம் பெற்றது கிடையாது.
 • உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது: தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கிறது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியிருக்கின்றது.
 • உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.
 • உழைப்பவனே பொருளுலகைப் படைக்கின்றான் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான்.
 • எதிரி ஈவிரக்கமற்றவன், போர் வெறிகொண்டவன் எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன். அவனது இதயக் கதவுகள் திறந்து எமக்கு நீதி கிடைக்குமென, நாம் எதிர்பார்க்க முடியாது.
 • எதிரியிடம் ஆயுத பலம் உண்டு – ஆட்பலமுண்டு – ஆதரவளிக்கும் நாடுகளுண்டு. நாம் தனித்துநின்று போராடுகின்றோம் எமக்கு எந்த நாட்டின் உதவியுமில்லை; ஆனால் எமக்குள்ள ஒரேயொரு பலம் எமது ஆத்ம பலம் தான்.
 • எத்தனை தடைகள் ஏற்பட்டபோதும் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டபோதும் கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடம் உள்ளவரை, எமது இலட்சிய பயணம் வெற்றியில் முடியும் என்பது நிச்சயம்.
 • எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டு பிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கிறது. அசுர பலங்கெண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.
 • எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியானவன் தனது இயலாத் தன்மையால் வெகுசனம் மீது மூர்க்கமாகப் பழிதீர்த்துக்கொள்ளத் தயங்குவதில்லை.
 • எனது மக்கள் பற்றியும், எனது தேசம் பற்றியும், எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
 • என் வாழ்க்கையில் விரத்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்லமுடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள் சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த கவலைக்குள்ளானதுண்டு.
 • என்றோ ஒருநாள், எதிரியானவன் எமது சமாதானக் கதவுகளைத் தட்டுவானாக இருந்தால், நாம் எமது நேசக்கரங்களை நீட்டத் தயாராக இருக்கின்றோம்.
 • எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிற்பதால் மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்துகொடாமல் எம்மால் தலைநிமிர்ந்து நிற்க முடிகின்றது.
 • எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள் இதுவே எமது தேசத்தின் அபிலாசை.
 • எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும் எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்படவேண்டும் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும் இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும்.
 • எமது தேசத்தின் வளத்தின் அடிப்படையில் எமது தேசிய பொருளாதாரம் சுயநிறைவு காணவேண்டும்.
 • எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடு கொடுத்து தனது விடுதலைப் பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்ததென்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை, நான் திட்டவட்டமாகக் கூறுவேன்.
 • எமது மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டவே நாம் ஆயுதங்களை எந்தினோம் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் நிலைநாட்டப்படாதவரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
 • எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை; எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம் அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தை கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.
 • ஏதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்.
 • ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.
 • ஒரு பிரச்சினையை ஆராய்வதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கும் பிரத்தியேகமான மனப்பக்குவம் அவசியம் சுயநலமற்ற, சொந்த விருப்பு – வெறுப்புக்களற்ற, உணர்வுகளுக்கும் பந்த பாசங்களுக்கும் இடமளிக்காத ஒரு நேர்மையான பார்வை அவசியம்.
 • ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதபலமோ அல்ல: அசைக்கமுடியாத மனவுறுதியும், வீரமும், விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.
 • ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
 • கட்டி எழுப்பப்படவுள்ள தமிழீழத்தின் வளர்ச்சிக்கு ஆயுதத்தை மட்டும் நம்பியிராமல், அனைத்துத் துறைகளிலுமே வளரவேண்டும் என்பதில் நான் அக்கறையாக உள்ளேன்.
 • கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் படிப்படியாக நிலைப்படுத்தி, மக்களின் பங்களிப்போடு விரிவுபடுத்தி வெகுசன யுத்தமாகப் பரிணாமம் பெறச்செய்யும் கொள்கைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, நாம் இந்தப் போராட்ட வடிவத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
 • கொண்ட கொள்கையில் நம்பிகையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது நிச்சயம்.
 • சமத்துவமும் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாக தமிமீழத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதே, எமது இலட்சியம். இந்தப் புதிய இலட்சியத்துடன் உருவாக்கம் பெறும் ஒரு சமூக அமைப்பில், நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத மனிதர்கள் நிர்வாகத்துறையில் புகுந்து சமூகத்தைச் சீரழிக்க நாம் அனுமதிக்க முடியாது.
 • சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
 • சமூக உறவுகளில் அடிப்படையான மாற்றத்தை நிகழத்துவதன் மூலமே, சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை வடிவங்களை ஒழித்துக்கட்டி, சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலை நிறுத்த முடியும்.
 • சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதி பரிபாலனத்தைக் கையாள வேண்டும்.
 • சமூக நீதியும் சனநாயக சுதந்திரங்களும் தழைத்தோங்கும் ஓர் உன்னத சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே, எமது அரசியல் இலட்சியமாகும்.
 • சமூக மாற்றத்திற்கு முதற்படியாக சமூக விழப்புணர்வு அவசியம்.
 • சாவையும், அழிவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காண முடியும்.
 • சிங்கள அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறை காரணமாகவே நாம் சுயநிர்ணய உரிமைக்காகவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும், போராட்டத்தில் குதித்தோம்.
 • சிங்களப் பயங்கரவாதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
 • சிங்களப் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் எமது நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றோம். சிங்கள ஆளும்வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுவரும் சிங்களப் பாட்டாளி மக்களை நாம் ஒரு நேச சக்தியாகவே கருதுகின்றோம்.
 • சிங்களப் பேரினவாதத்தின் தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தழிழீழ மக்களுக்குத் திறந்துவைக்கிறது; அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை.
 • சிங்களப் பேரினவாதத்தின் தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை, அந்த மாற்றம் ஏற்படாதவரை தமிழருக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.
 • சீற்றங்கொண்ட பூகம்பத்தின் குமுறலாக எழும் எமது இனத்தின் எழுச்சிகுரலை சிங்கள தேசமும், சர்வதேச சமூகமும் அசட்டை செய்யமுடியாது.
 • சுதந்தரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.
 • சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.
 • சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும், தன்மானம் இழந்து தலை குனிந்து வாழவேண்டும்,பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும், படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
 • சுதந்திரம் இல்லாமல் மனிதவாழ்வில் அர்த்தமே இல்லை.
 • சுயநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம் மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயாக ஆட்சிமுறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.
 • சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.
 • தங்களுடைய உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்தின் உதவியுடன், சுதந்திர தமிழீழ நாடு நிறுவப்பட்டால் ஒழிய, ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.
 • தன்னிறைவான – தன்னில் தானே தங்கிநிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம்.
 • தன்னிறைவான பொருளாதாரம் எமது தேசிய வாழ்வுக்கு மூலாதாரமானது; தனியரசு நிர்வாகத்திற்கு அத்திவாரமானது.
 • தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்துபோன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது.
 • தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.
 • தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும் தெளிவும் உண்டு; எமது நிலைப் பாட்டை எமது எதிரி மட்டுமன்றி, முழு உலகமும் நன்கறியும்.
 • தமிழீழம் ஒரு செழிப்பான பூமி; வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, அதனை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்லக்கூடிய நீர் வளத்தையும், நிலவளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனங்கண்டு, அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்வகையில், திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில், உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.
 • தமிழீழம் ஒரு செழிப்பான பூமி; வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, அதனை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்லக்கூடிய நீர் வளத்தையும்இ நிலவளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனங்கண்டு, அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்வகையில், திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில், உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.
 • தமிழ் – சிங்கள பாட்டாளிகள் மத்தியில் வர்க்க ஒருமைப்பாடு ஏற்படுவதனால், தமிழரின் தன்னாட்சி உரிமையை சிங்களத் தொழிலாள வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும்.
 • தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு ‘தேசிய மக்கள் படையாக, நாங்கள் எங்கள் போரை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
 • தாயக விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிற்கும் கல்விகற்கும் உரிமைக்கும் இடையில், நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயலவில்லை இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமையாதவை.
 • தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது; சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.
 • திலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்து தமிழீழ தேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
 • தென்னிலங்கைச் சமூகக் கட்டமைப்பின் சகல மட்டங்களிலும் பூதாகரமாக வளர்ந்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழ் மக்களை காருணியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் என நம்பவில்லை. சிங்கள தேசம் இனவாதப்பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.
 • தேச விடுதலை என்பது எல்லாரது விடுதலையையும் விடிவையும் குறித்து நிற்கும் ஒரு பொதுவான குறிக்கோள் ஒரு தேசிய இலட்சியம். இந்த இலட்சியத்தில் எல்லாரும் பங்குகொள்ளும்பொழுதுதான் தமிழரின் சுதந்திர இயக்கம் வலுமிக்க சக்தியாக உருப்பெறும்.
 • தேசிய ஒற்றுமையையும் – இன ஒருமைப்பாட்டினையும் ஒரு வலுவான அத்திவாரத்தில் கட்டியெழுப்புவதென்றால், எம் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட வேண்டும்: சமூக முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
 • தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட – கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.
 • நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.
 • நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.
 • நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது.
 • நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.
 • நாம் இனத்துவேசிகள் அல்லர் போர்வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர் நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ கருதவில்லை. சனநாயக அரசியல் மரபிற்கு நாம் விரோதமானவர்கள் அல்லர் எமது மக்களின் அடிப்படையான சனநாயக அரசியல் உரிமைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோம்.
 • நாம் உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம். எமது தாயக பூமியை எதிரியிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழம் அமைக்கும்வரை, நாம் தொடர்ந்து போராடுவோம்.
 • நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை; ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.
 • நாம் துணிந்து போராடுவோம். சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.
 • நாம் போராடி இரத்தம் சிந்தி எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் எமக்கு வேறுவழியில்லை. ஒன்று, அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழவேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி.
 • நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
 • நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடான சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது.
 • பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப்பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்றுவிடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
 • பலம்வாய்ந்த ஒரு எதிரியைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத் தெறிந்து, அவனது ஆயுதபலத்தை அழிப்பதற்குக் கெரில்லாப் பாணியிலான போர் முறையே தலைசிறந்த யுத்த தந்திரோபாயமாகும்.
 • புவியியல் ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி, எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து, எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நிலப்பகுதியை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ளுவதுடன், தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.
 • பேரினவாதச் சித்தாந்தப் பிடியிலிருந்து விடுதலை பெற்று விழிப்புணர்வு அடையும்பொழுதுதான், தமிழரின் சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிகரத் தன்மையைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள்.
 • போராட்ட பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறுதோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்.
 • போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
 • போராட்டத்தின் யதார்த்த நிலையை – புறநிலை உண்மைகளை – மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன், மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துலகைக் கட்டிவளர்ப்பதில், மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.
 • போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்ய வேண்டும்.
 • மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது; உலக வரலாறு பகரும் உண்மை இது.
 • மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
 • மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
 • மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றது; தமிழ் இனத்தின் தேசிய ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின் மூலம் அடிமை கொள்வதே எதிரியின் திட்டம்.
 • வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து விடும் சூத்திரப் பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.
 • விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக – உயிர்மூச்சாக – இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே.
 • விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல், எமது மண்ணில் காலங்காலமாக நிலைத்திருந்த பழமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்திவருகின்றது, எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றன் எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது; புதிய விழிப்புணர்வு தோன்றிவருகின்றது; சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
 • விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.
 • வேளாண்மையும் கைத்தொழிலுமே எமது பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானவை; தன்னிறைவான பொருளாதார வாழ்வுக்கு ஆதாரமானவை.
 • ஒரு புதுமைப் பெண்ணை – புரட்சிகரப் பெண்ணை – எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கின்றது.
 • பெண் விடுதலை என்பது, அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்சுரண்டல் முறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதாகும்.
 • மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது; அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது.
 • அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை; தமிழீழத்தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.
 • சாவுக்கு அஞ்சாத மனோதிடம் படைத்தவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். அவர்களே சரித்திரத்தையும் படைக்கிறார்கள். அன்னை பூபதியும் ஒரு சரித்திரத்தைப் படைத்தார்.
 • ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது,ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.
 • ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் – கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைப் பகிர்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக்கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால்வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும்.
 • எமது இனத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்துவந்தால், எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப்போராட்டமாக முன்னெடுப்பது கடினம்.
 • எமது விடுதலை இயக்கத்துடன் இணைந்துகொள்வதன் மூலமே,பெண்ணினம் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் வெற்றிபெற முடியும்.
 • காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும் விழிப்புத்தான் அவர்களின் விடுதலைக்கு முதற்படி.
 • சமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.
 • தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழமை என்றும், காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்.
 • நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம் தமிழர்; வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
 • பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது.
 • பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்களே போர்க்கொடி உயர்த்தவேண்டும் போராடவேண்டும்.
 • பெண் ஒடுக்குமுறை என்பது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை; நீண்ட நெடுங்காலமாக, எமது பண்பாட்டு வாழ்வில் ஆழப் புரையோடி நிற்கும் சமூகக் கொடுமை. இந்தச் சமூக அநீதியை வேரோடு பிடுங்கி எறிய எமது இயக்கம் உறுதி பூண்டு நிற்கிறது.
 • பெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச் செய்கிறது. பெண்கள் சுதந்திரமாக, கௌரமாக, சமத்துவமாக வாழவழிசெய்யும் ஒரு மக்கள் சமூகமாக இருக்க முடியும் அந்தச் சமுகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடையமுடியும்.
 • பெண்கள் சம உரிமை பெற்று – சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக – கௌரவமாக – வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமையவேண்டும் என்பதே எனது ஆவல்.
 • பெண்கள் விழிபுற்று, எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான், அந்தப் போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும்.
 • பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.
 • பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் – பெண்மை பற்றிய அவர்களது கருத்துலகில் – ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
 • மகளிர் படைப்பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை, நான் பெருமிதத்துடன் கூற முடியும்.
 • விழிப்படைந்து எழுச்சிகொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்.
 • வீரத்திலும் – தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண்போராளிகள், தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
 • சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது.
 • இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல,புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர் தமிழ் இனத்திற்கு எதிரான போர் தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர் மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.
 • இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
 • எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
 • சமாதானத்திற்கான போர்’ என்றும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை’ என்றும் ‘தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்’ என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.
 • சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
 • நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடி வருகிறோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடி வருகிறோம்.
 • எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
 • தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.
 • எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதான வழிமுறை தழுவி, அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதுமில்லை.
 • சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
 • தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.
 • போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமோ அந்தப் போராட்டடச் சக்தியை அந்நியப்படுத்தி அழித்துவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. இது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.
 • எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
 • எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்; கெளரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப்போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல; அவர்கள் பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் – அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.
 • எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
 • சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
 • தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம்.
 • தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.
 • நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம் மிகவும் தொன்மை வாய்ந்த இனம் தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.
 • பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.
 • போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
 • இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக,கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
 • இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து,வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
 • எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
 • சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண் பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.
 • மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
 • தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
 • அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
 • ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.
 • ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.
 • உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
 • எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
 • எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம்.
 • சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
 • மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
 • அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச்சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது.
 • தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது.
 • மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.
 • எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
 • எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.
 • எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
 • எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில்,நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
 • காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 • தர்மமும், உண்மையும் இறுதியில் வெற்றியளித்து தமிழ்த் தாயில் கருக்கொண்டுள்ள வரலாற்றுக் குழந்தையான தமிழீழம் என்றோ ஒரு நாள் பிரசவமெடுக்கும் என்பதுஎனது நம்பிக்கை.
SHARE