5 மில்லியன் குடும்பத்தில் இணைந்திருக்கிறோம் – கீர்த்தி சுரேஷ்

20
இந்த அன்புக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் மகாநதி படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியுள்ளது.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்போது நாங்கள் 5 மில்லியன் குடும்பத்தில் இணைந்திருக்கிறோம். நானும் நைக்கும் இந்த அன்புக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்’ என பதிவிட்டிருக்கிறார்.
SHARE