தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட போனிகபூர் மற்றும் அவரது இரு மகள்கள்

45
வலிமை பட தயாரிப்பாளர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா

மகள்களுடன் போனிகபூர்
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது அவர் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரிக்கிறார். போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். போனிகபூரின் இல்லம் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போனிகபூர் வீட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போனிகபூர்இந்நிலையில், அதன் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் போனிகபூர் மற்றும் அவரது இரு மகள்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
SHARE