கொரோனா வைரஸை கனிசமான அளவு இலங்கையில் கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாராட்டத்தக்கவர்

29

கடந்த மாதங்களாக இலங்கையில் கொரோனா வைரஸினுடைய பரவல் பாரியளவில் ஏனைய நாடுகளை விடவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். அந்தவகையில் ஒரு ஆளுமை மிக்க செயல் வீரனாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பார்க்கப்படுகிறார். அதே போன்று அவசரப்பட்டு ஒரு தேர்தலை வைக்க வேண்டும் என்று முயற்சிகளை எடுப்பது ஆபத்தாக வந்தமையும் என்றே கூறவேண்டும்.

ஆகவே இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். அரணம் தப்பினால் மரணம் என்று தான் இன்றைய நிலை உள்ளது. சுயலாப அரசியலுக்காக மக்களை பாதிக்கும் வகையில் எமது அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது. இதே உத்வேகத்தில் தமிழ் மக்களுக்கான தேசிய பிரச்சனைக்கான ஒரு தீர்வை ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொடுப்பாராயின் தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் அவர் நீங்காத இடத்தில் இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை விடுத்து இராணுவ அடக்கு முறையினூடாக எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தையும் பௌத்த துறவிகளினுடைய இனவாத கருத்துக்களில் இருந்து விடுபடும் வரையிலும் இலங்கையில் இனவாத அரசியல் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

SHARE