விஷாலுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்

73
விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர், விஷால்
‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.
மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். இவ்வாறு பிஸியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் தங்கவேலு, விஷால், பிரியா பவானி சங்கர்பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE