லாக்டவுன் சமயத்தில் தமிழ் பேச கற்கும் ராஷிகண்ணா

61
லாக்டவுனில் தமிழ் கற்கும் சூர்யா பட நடிகை

சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக சுந்தர் சி-யின் அரண்மனை 3, சூர்யாவுக்கு ஜோடியாக அருவா, ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி என கைவசம் 3 தமிழ் படங்களை வைத்துள்ளார்.
ராசி கண்ணாலாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அடுத்தடுத்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வருவதால், நடிகை ராசி கண்ணா இந்த லாக்டவுன் சமயத்தில் தமிழ் பேச கற்று வருகிறார். ஆன்லைனில் இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதன்முலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற உணர்வு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை ராசி கண்ணாவின் இந்த முயற்சிக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
SHARE