அனிருத் ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் – சிவகார்த்திகேயன்

60
சிவகார்த்திகேயன், அனிருத்
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.
அனிருத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு இந்நிலையில், அனிருத் சமூக வலைதள பக்கத்தில் தான் ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், “சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குனாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்” என்று கமெண்ட் செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த கமெண்டை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
SHARE