மீண்டும் 24 பட இயக்குனருடன் இணையும் சூர்யா

61
மீண்டும் 24 பட இயக்குனருடன் இணையும் சூர்யா

சூர்யா, விக்ரம் குமார்
தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் சூர்யாவின் 24 படத்தை இயக்கினார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். சூர்யாவுக்கு தான் சொன்ன கதை பிடித்திருந்ததாகவும், 2021-ல் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
விக்ரம் குமார், சூர்யாசூர்யா  சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ள சூர்யா, இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
SHARE