இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை

31

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சந்தேகமாக இருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கை சென்று விளையாட இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

எனினும், இத்தொடரை இந்த காலப்பகுதியில் நடத்துவது குறித்து இலங்கை அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி பெற்றவுடன் அதற்கான வேலைகளை இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுக்கும். மேலும், குறிப்பிட்ட இரசிகர்களை மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தொடரை இரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்த நிலையிலேயே இந்தியா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

SHARE