ஆகஸ்டில் 46ஆவது தேசிய விளையாட்டு விழா

44

இதன்படி, இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேசிய விளையாட்டு விழாவை இவ்வருடம் நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த பணிப்பாளர்களுக்கும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்துக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை (11) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் முக்கிய அதிகாரிகள் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த பணிப்பாளார்களும் கலந்துகொண்டனர்.

இதன்படி, அனைத்து மாகாண பணிப்பளர்களினதும் ஏகோபித்த கோரிக்கைக்கு அமைய இவ்வருட இறுதிக்குள் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.பி விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு தேசிய விளையாட்டு விழாவின் இறுதி போட்டி நிகழ்ச்சிகளை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார். தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை தேசிய விளையாட்டு விழாவுக்கு பிரதேச செயலாளர் மட்டத்தில் நடத்தப்பட்ட பெரும்பாலான போட்டிகள் கொரோனா வைரஸுக்கு முன் நடத்தப்பட்டுவிட்டன.

எஞ்சியுள்ள மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்கு முன் நடத்தப்படும் என குறித்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1972ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற தேசிய விளையாட்டு விழா 1977, 1983 மற்றும் 1987 ஆகிய வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

இதன்படி, 33 வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழாவை ரத்து செய்கின்ற யோசனை நடைபெற்ற மாகாண பணிப்பாளர்களின் சந்திப்பின் போது புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SHARE