92 லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்

30
92 லட்சத்தை நெருங்கும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை

கொரோனா பரிசோதனை
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 91 லட்சத்து 79 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 884 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 23,88,001
பிரேசில் – 11,11,348
ரஷியா – 5,92,280
இந்தியா – 4,25,282
இங்கிலாந்து – 3,04,331
ஸ்பெயின் – 2,93,584
பெரு – 2,57,447
சிலி – 2,46,963
இத்தாலி – 2,38,720
ஈரான் – 2,07,525
SHARE