கிரிக்கெட் உடற்பயிற்சியாளராக ஸ்ரீபாலி வீரக்கொடி

26

இது தொடர்பில் பங்களாதேஷின் BDCrictime இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவில் உள்ள முன்னணி உடற்பயிற்சி நிலையமொன்றினால் நடத்தப்பட்ட சர்வதேச அங்கீகாரம் கொண்ட Master and Fitness உடற் பயிற்சியாளராகும் கற்கை நெறியை கடந்த சில வருடங்களாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முன்னெடுத்து வந்தேன்.” நான் கடந்த 12 வருடங்களாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்றேன். எனது தொழில்முறை வாழ்க்கையில் இருந்த மற்றுமொரு கனவு தான் இது.

34 வயதான வவதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீபாலி வீரக்கொடி இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுக்களையும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE