MCC தொடர்பில் இலங்கைக்கு எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை

23

மில்லினியம் சவால் திட்டத்தை (MCC ஒப்பந்தம்) மீளாய்வு செய்த குழு தனது இறுதி அறிக்கையை நேற்று (25) ஜனாதிபதியிடம் கையளித்தது. இதன்போது, கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் MCC உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாகவும், இதன் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருப்பினும், அதற்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என, அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE