வடமாகாணத்தில் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள 48 மேற்ப்பட்ட சுயேட்சைக் குழுக்கள் அரச புலனாய்வாளர்களே!

114

வடமாகாணத்தில் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள 40 மேற்ப்பட்ட சுயேட்சைக் குழுக்கள் அரச புலனாய்வாளர்களே!

தமிழ் மக்களின் வாக்குகளை சரிப்பதற்காக வடக்கு கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக் குழுக்கள் என்ன நோக்கத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமாக முஸ்லீம் – சிங்களவர்கள் காலூன்றும் வகையில் இந்த களமிறக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழினத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய அரச தரப்பினர் ஜனநாயக வழயில் தேர்தல் கேட்கிறார்கள். இதில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சோரம் போன தமிழ்த் தரப்பினர்கள் அரசாங்கத்தை நியாயப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது என்கிற கேள்வியை கேட்கிறார்கள். அப்படியானால் யுத்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் என்ன செய்துகொண்டிருந்தார்கள். இதற்கு இவர்களால் பதில் கூற முடியாது. அதே காட்டிக்கொடுப்பைத் தான் தமது தொழிலாக செய்கிறார்கள். இதனை இவர்கள் கைவிடவேண்டும்.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற விடயத்தை இவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். உரிமை சார்ந்த விடயம் என்கிறபோது அபிவிருத்தியை ஒரு மூலையில் வைத்துவிட்டு உரிமைக்கான போராட்டம் மேற்கொள்ளப்படவேண்டும். தொடர்ந்தும் சோரம் போகின்ற அடிமை வாழ்க்கை வாழ்கின்ற இனமாக அரசு எம்மை கணித்திருக்கின்றது. கடந்த காலங்களில் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராட, இவர்கள் கைகட்டி வேடிக்கை பாரத்தது மட்டுமல்ல, தமது புலானய்வு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
வெள்ளைத்தோல் போர்த்துகின்ற ஆடுகளைப் போல இவர்களுடைய செயற்பாடுகள் அமையப்போகிறது. இவர்களை களையெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. பதிவு செய்யப்படட கட்சிகள் இருக்க இவர்களின் வரவு என்பது இருக்கக்கூடிய தமிழ் மக்களின் ஆசனங்களை சரிப்பதே ஆகும். கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்த நாதியற்றவர்கள் அரசாங்கத் தரப்புடன் இணைந்து தொடர்ந்தும் கைக்கூலிகளாக செயற்படுவது என்பது ஏற்புடையது அல்ல. சுயேட்சையினர் வெல்லப்போவதில்லை. சவால் விட்டு இந்த பத்தியை எழுதுகின்றோம். ஆகவே இவர்களின் நோக்கம் தமிழ் மக்ளுக்கு வருகின்ற ஒட்டுமொத்த வாக்குகளைச் சுரண்டுவதாகும் அல்லது தமது சுயலாப அரசியலுக்காக செயற்படுவதாகும். தமிழ் மக்கள் மீது அக்கறைகொண்டால் தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து செய்றபடலாம். வேடிக்கை என்னவெனில் படித்தவர்களும் படிக்காதவர்களும் சுயேட்சைகளில் களமிறங்கியிரு;ப்பது நகைப்புக்குரியது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை போருக்குப் பின்னரான காலப்பகுதிகளில் எவ்வாறு ஒரு வாழ்க்;கை வாழ்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. இனப்படுகொலையின் உச்சம் என்ன என்பது எமக்கு நன்கு தெரியும். 1983 – 1990 வரையிலான இனவழிப்பு அதனைத் தொடர்ந்து 1990 – 2000 வரையிலான இனவழிப்பு, 2000- 2009 வரையிலான இனவழிப்பு, தற்போது மறைமுகமாக தமழினத்தின் வரலாற்றை அழிக்கின்ற சிங்கள ஏகாதிபத்திய அரசு செயற்பட்டு வருகின்றது. இதனைத்தான் அரச பயங்கரவாதம் என்று கூறுவார்கள். நாம் ஒற்றுமையாக வாழவேண்டும். சிங்கள ஆட்சியாளர்களை எதிர்க்க திராணியற்றவர்களே இந்த சுயேட்சைக்குழுக்களில் போட்டியிடுகின்றனர். சுமந்திரன் தவறு செய்கின்றாரா? சரியாக செயற்படுகின்றாரா? ஏன்பதை இந்த ஆண்டின் தேர்தல் தீர்மானிக்கும்.
எமது போராட்டங்கள் அனைத்தும் அரசுக்கு எதிரானதாகவே திசைதிருப்பப்படவேண்டும். வெறுமனே தமிழ் அரசியல் தலைமைகளும் சிங்கள அரசியல் தலைமைகளுடன் இணைந்து தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுயேட்சைக் குழுக்களாக சிங்கள பகுதிகளில் சென்று உங்களால் போட்டியிட முடியுமா?, போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா? அப்படியாகவிருக்கும் போது தமிழ் மக்கள் ஏன் சிங்களவர்களுக்கு அல்லது முஸ்லீம்களுக்கு வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்களை தமிழினத்தை அழிக்க கங்கணம்கட்டி புறப்பட்டிருக்கும சிங்கள இனவாத அரசுடன் இணைந்து துரோகத்தனத்தை குறித்த 40 மேற்ப்பட்ட சுயேட்சைக் குழுக்களும் செய்வதற்காகக் களமிறங்கியிருக்கின்றன. இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
இரணியன்

SHARE