இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு

55
இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இவற்றில், சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ‘யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட்’ நடத்தும் டிக் டாக், ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் அடங்கும்.

இந்த 3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது. இந்த நஷ்டம், மற்ற 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE