இந்தியாவுக்கு வலுவான ஆதரவை தெரிவித்த ஜப்பான்

103
லடாக் மோதல் விவகாரம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு

இந்தியா ஜப்பான் கொடி
இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், சீனா தன்னிச்சையாக ராணுவ நிலையை மாற்றுவதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரவித்துள்ளது. இதன் மூலம் லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் தொடர்பாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுசுகி மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் சிரிங்லாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு சடோஷி சுசுகி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

வெளியுறவு செயலர் சிரிங்லாவுடன் ஒரு நல்ல பேச்சு இருந்தது. எல்லை கட்டுப்பாடு பகுதியில் நிலவும் சூழல் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஜப்பானும் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் அமைதியான தீர்வை தான் விரும்புகிறது. ஒருதலைப்பட்சமாகவும், தன்னிச்சையாகவும் ராணுவ நிலைகளை மாற்றும் எந்த முயற்சியையும் ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE