அமரர். அருணாசலம் தங்கத்துரையின் 23ஆவது நினைவு

27
முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 23ஆவது நினைவு தினக் கூட்டம் வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திருமதி. ஸ்ரீபாஸ்கரன் அவர்களின் இல்லத்தில் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் தங்க. முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. அமரர் தங்கத்துரையின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்திய பின் திருவாளர்கள். கா. குலசேகரம், க. திருஞானசம்பந்தர், கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா, சிரேஸ்ட துணைத் தலைவர் ச. அரவிந்தன், செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருமலையிலுள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் புதிய மூன்றுமாடிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தபின் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை உட்பட பாடசாலை அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் வே.ரட்ணராஜா மற்றும் சமூக சேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவர் கொல்லப்பட்டனர்.
SHARE