2020 கேலக்ஸி அன்பேக்டு விழாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் நிறுவனம்

42
ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் சாம்சங்

கேலக்ஸி நோட் 20 லீக்
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி டே மூன் ரோ கேலக்ஸி அன்பேக்டு விழாவில் ஐந்து புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இவ்விழா ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. வழக்கமாக கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது. அவற்றில் புதிய மாடலும் முந்தை வெர்ஷன் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 20 லீக்எனினும், இதன் ஹார்டுவேரில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர கேலக்ஸி டேப் எஸ்7 மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த சாதனமும் முந்தைய டேப் எஸ்6 போன்றே காட்சியளிக்கும் என்றும் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேரில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன், டேப்லெட் வரிசையில் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் புதிய கேலக்ஸி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய இயர்போன் கேலக்ஸி பட்ஸ் லைவ் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE