இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்ட கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்

37
இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

கேலக்ஸி ஏ21எஸ்
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 16499 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை சாம்சங் மற்றும் இதர விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் புதிய விலை ரூ. 17499 ஆக மாறி இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
 
 கேலக்ஸி ஏ21எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
– எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
– 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
– 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
– 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
– 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
– யுஎஸ்பி டைப் சி
– 5,000 எம்ஏஹெச் பேட்டரி
– 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
SHARE