முதல் கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லெனோவோ நிறுவனம்

111
லெனோவோ லீஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

லெனோவோ லீஜியன் போன் டூயெல்
லெனோவோ நிறுவனம் லீஜியன் போன் டூயெல் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் AMOLED 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் டூயல் லிக்விட் கூலிங் சொல்யூஷன் வழங்கப்பட்டு உள்ளது. லீஜியன் போன் டூயெல் மாடலில் ஜிஏஇ கேம் அக்செலரேஷன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 20 எம்பி பாப் அப் கேமரா பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ளது.
 
லெனோவோ லீஜியன் போன் டூயெல்
 
லெனோவோ லீஜியன் டூயெல் சிறப்பம்சங்கள்
– 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz AMOLED HDR டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ZUI 12/ லீஜியன் ஒஎஸ்
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
– 16 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– 20 எம்பி பாப் அப் செல்ஃபி கேமரா, f/2.2
– யுஎஸ்பி டைப் சி
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 45 வாட் / 65 வாட் / 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
லெனோவோ லீஜியன் போன் டூயெல் மாடல் துவக்க விலை 3499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 37320 என்றும், டாப் எண்ட் மாடல் விலை 5999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 63975 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
SHARE