விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?

58
முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?

அனுஷ்கா, விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கிலும் நடிக்கிறார். மேலும் தேவர்மகன் படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தை விஜய் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக  உள்ளதாகவும், தலைவி படத்திற்கு பின் விஜய் இப்படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
SHARE