சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்ற மான்செஸ்டர் யுனைடெட், செல்சி

32
சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றது மான்செஸ்டர் யுனைடெட், செல்சி

மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள்
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்றிரவு நடைபெற்றன. மான்செஸ்டர் யுனைடெட், லெய்செஸ்டர் அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறலாம் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடின.
ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி வெற்றி பெற்றது. ப்ரூனோ பெர்னாண்டஸ் 71-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டில் வாய்ப்பை கோலாக்கினார். இன்ஜுரிக்கான நேரத்தில் (90+8) லிங்கார்டு ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெ் 38 போட்டிகளில் முடிவில் 18 வெற்றி, 12 டிரா, 8 தோல்விகளுடன் 66 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.
செல்சி அணி வீரர்கள்
செல்சி வோல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் செல்சி 2-0 என வெற்றி பெற்றது. மாசன் மவுன்ட் (45+1), ஆலிவர் ஜிராட் (45+4) கோல் அடித்தனர். செல்சி 38 ஆட்டங்களில் 20 வெற்றி, 6 டிரா, 12 தோல்விகள் மூலம் 66 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றன.
லெய்செஸ்டர் வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்தை பிடித்து சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றிருக்கும். அந்த வாய்ப்பை இழந்தது.
லிவர்பூல் 38 ஆட்டங்களில் 32 வெற்றி, தலா மூன்று டிரா மற்றும் தோல்வியுடன் 99 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி 26 வெற்றி, 3 டிரா, 9 தோல்விகளுடன் 81 புள்ளிகளை பெற்றி 2-வது இடத்தை பிடித்தது.
SHARE