அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்ட விவோ வி19

77
இந்தியாவில் விவோ வி19 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

விவோ வி19
 விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ. 27990 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ வி19 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 4 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27990 என மாறி உள்ளது. அந்த வகையில் இரு மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட விலை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் பிரதிபலிக்கிறது.
 விவோ வி19 சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி19 மாடலில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், காப்பர் டியூப் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கிளாஸ் சான்ட்விட்ச் டிசைன் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
SHARE