இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்

41
ரூ. 12999 விலையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹெட்போன் நிறுவனமான ஆர்ஹெச்ஏ இந்தியாவில் ட்ரூகனெக்ட் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இவற்றில் 44 மணி நேர பேட்டரி லைஃப், ப்ளூடூத் 5.0, ஐபி55 சான்று, கேபாசிட்டி டச் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 6எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி வழங்குகிறது. ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் மற்ற சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்வதோடு சீரான இணைப்பை வழங்குகிறது.
 ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் அழைப்புகளுக்கு ஏற்ற வகையில் ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது. மேலும் இதில் நாய்ஸ் ரெட்யூசிங் மைக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஐபி55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
இதன் மியூசிக் பிளேபேக், வால்யூம் போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்றும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 35 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என ஆர்ஹெச்ஏ தெரிவித்து இருக்கிறது.
ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் கார்பன் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 12999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
SHARE