சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் தனுஷின் பாடல் மற்றும் போஸ்டர்

51
தனுஷ் பிறந்தநாளுக்கு ஜகமே தந்திரம், கர்ணன் படக்குழுவினர் கொடுத்த கிப்ட்

நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனுஷூக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து வெளியிட்டார்கள்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்துள்ளன.
தனுஷ்அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கர்ணன் டைட்டில் லுக் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் மாரி செல்வராஜ், “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று கூறியுள்ளார். தற்போது இந்த போஸ்டரும் பாடலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
SHARE