ஒரு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இலங்கையில் இன்று உள்ளது – ரணில் விக்கிரமசிங்க

37

கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அல்ல, மூன்று அல்ல, நான்கு அல்ல ஒரு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இலங்கையில் இன்று உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி 54 உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்க முடிவு செய்தது. இது இலகுவாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.  மிகவும் யோசித்து எடுக்கப்பட்ட தீர்மானம்.

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். சத்தமிட்டு பயனில்லை என்பது நமக்கு தெரியும்.

கட்சி நல்லது இல்லையென்றால் தயவு செய்து வெளியேறி வேறு கட்சியை உருவாக்குங்கள். நாங்கள் போட்டியிடுகின்றோம். அதில் பிரச்சினை இல்லை . உள்ளேயிருந்து தீங்கு விளைவிக்காதீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE