ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள்

47

ஜப்பான் மற்றும் கட்டாரில் வேலைக்காக சென்ற 47 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இருவேறு விமானங்கள் ஊடாக குறித்த குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து வருகை தந்தவர்கள் அந்நாட்டு கடற்படையில் சேவையாற்றும் 41 இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE