தமிழ்த் தேசியத்திற்காக திரண்ட கிளிநொச்சி பாரதிபுரம் மக்கள்

49

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில்  நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பாரதிபுரம்  மக்கள்  திரண்டிருந்தனர்.

குறித்த கூட்டமானது மாலை 6மணிக்கு கரைச்சி  பிரதேச சபையின் பாரதிபுர வட்டார உறுப்பினர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது
மங்கள விளக்கேற்றுதல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இப் பிரச்சாரக் கூட்டத்தில்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்  கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன்  தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
SHARE