சி.சிறீதரன் அவர்களுடைய தேர்தல் விளம்பர பதாதைக்கு சட்டவிரோத துப்பாக்கி பிரயோகம்

41

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற
உறுப்பினர் சந்திரகுமாரின் குறித்த பகுதி அமைப்பாளர்  முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்
அவர்களுடைய தேர்தல் விளம்பர பதாதைக்கு சட்டவிரோத துப்பாக்கியை பாவித்து
சூட்ட்டுள்ளமை அப் பகுதியில் பெரும் அச்ச நிலமையை தோற்றுவித்துள்ளது

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

நேற்று பிற்பகல் 7 மணியளவில்  கண்டாவளைப் பகுதியில்  முன்னாள் ஈபிடிபி
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது

இதன் போது   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய ஆதர்வாளர்கள் என
கூறிய சிலரும் அப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

இதனை காரணமாக கொண்டு  சந்திரகுமாரின்  கண்டாவளை பிரதேச அமைப்பாளர் ரவி
என்பவர் அப்பகுதி  சி.சிறீதரன் அவர்களுடைய  அமைப்பாளரை தொலைபேசி மூலம்
தொடர்பு கொண்டு இப் பகுதி எங்களூடையது எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்ய
முடியும் ஆகவே என்னிடம் உள்ள துபாக்கியைக் கொண்டு   முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன்
அவர்களுடைய விளம்பரப் பதாதைகளை சுட்டுத் தள்ளப் போகின்றேன்  வந்து
பாருங்கள் என தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததுடன்

அதன் பின்னர் விளம்பர பதாதை மீது சட்டவிரோத துப்பாக்கி (சொட்கண்
துப்பாக்கி)  கொண்டு துப்பாக்கி பிரயோகம்  பிரயோகம் செய்துள்ளார் இதனால்
குறித்த பகுதியில் சில மணி நேரம் அச்ச நிலமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது

குறித்த விடயம் தொடர்பில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம்
தொலைபேசி மூலம் வினவிய பொழுது அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக எனது
அமைப்பாளர் மூலமாக அறிந்தேன் அதன் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள் ஒரு
வேட்பாளராக இருக்கும் போதே சந்திரகுமார் சட்டவிரோத ஆயுதங்கள்
பயன்படுத்துகின்றார் அதன் மூலம்  மூலம் என் விளம்பர பதாதைகள் மீது
துப்பாக்கி பிரயோகம் செய்கின்றார்கள் எனில் இவர்களுக்கு மக்கள் ஆணை
வழங்கினால் எம் மக்களின் நிலமை என்னாகும் என்று நீங்களே யோசித்து செய்தியை
பிரசுரியுங்கள் என கூறிய வாறு தொடர்பை துண்டித்துள்ளார்

SHARE