குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,439 ஆக அதிகரிப்பு

16

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,439 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிதாக இன்று 48 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி வீடுதிரும்பியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 2815 பேரில் தற்போது 365 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE