இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தல்

43

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிக அதிக செலவை கொண்டு நடத்தப்படும் தேர்தலாக அமையவுள்ளது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியனுக்குள் மட்டுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு போராடி வருவதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக எதிர்கொள்ள வேண்டிய பல சுகாதார நடவடிக்கைகள் மற்றும் மேலதிக ஊழியர்களை நியமித்தல் ஆகியவற்றின் காரணமாக செலவுகள் 10 பில்லியனை தாண்டாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியைத் தொடர்ந்து வாக்களிக்க முடியும் என்றும், அவர்களுக்கு ஒரு தனி நேரத்தை ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வாக்களிப்பிறகான நேரம் மேலும் ஒரு மணி நேரம் ஏற்கனவே நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தவகையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE