பாகிஸ்தான் அணியுடன் இணையும் ஹாரிஸ் ரவூப்

15

இதன்காரணமாக, பாகிஸ்தான் அணியுடனான ரி20 குழாத்தில் இணைந்துகொள்ள (31) அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் கொவிட் – 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10 வீரர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் இருப்பது முதலில் உறுதியானதுடன், இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் குறித்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

10 வீரர்களில் ஆறு பேருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் இல்லை என முடிவு வந்ததால் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்று பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொண்டனர்.

சொந்த காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிக் கொண்ட மொஹமட் ஆமிர், ஹாரிஸ் ரவூப்வுக்குப் பதிலாக மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஹாரிஸ் ரவூப்புக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக, அவர் இன்றைய தினம் (31) இங்கிலாந்து சென்று பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE