ஐபிஎல் வீரர்கள்: 2 வாரத்தில் 4 முறை கொரோனா பரிசோதனை

11

ஐபிஎல் 2020 தொடரில் ஆட உள்ள வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளின் பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பிசிசிஐ. இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு சுழலுக்குள் வந்து விட்ட யாரும் மீண்டும் வெளியே சென்று விட்டு, உள்ளே வர முடியாது.

2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ களமிறங்கி உள்ளது.

பயோ பபுள் எனும் உயிர் பாதுகாப்பு சுழல் ஏற்படுத்தப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பஸ் சாரதி வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது. ஒருவேளை யாரேனும் உயிர் பாதுகாப்பு சுழலை விட்டு விலகினால் அவர்களை மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் அனுமதிக்க முடியாது எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது வீரர்களுடன் பயணிக்கும் மனைவி, காதலி அல்லது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.

SHARE