டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய இங்கிலாந்து

10

முன்னதாக நடைபெற்ற ஆஷஸ் தொடரை 2-2 என சமப்படுத்திய இங்கிலாந்து அணி, கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3–1 என கைப்பற்றியது. மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, இறுதியாக இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2–0 என இழந்தது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை 2-0 என அல்லது 3-0 என கைப்பற்றினால் இங்கிலாந்து அணிக்கு புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நான்கு டெஸ்ட் தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி மூன்று தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 296 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நான்காவது இடத்தில் 180 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும், இதை தொடர்ந்து பாகிஸ்தான் (140 புள்ளிகள்), இலங்கை (80 புள்ளிகள்), மேற்கிந்திய தீவுகள் (40 புள்ளிகள்) மற்றும் தென்னாபிரிக்கா(24 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

இதில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ் அணி 9ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE