சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

65

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்

கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கி உள்ளது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு சாம்சங் ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

இத்துடன் இரு மாடல்களுக்கும் விரைவில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர வலைதளங்களில் விரைவில் முன்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 கேலக்ஸி நோட் 20

கேலக்ஸி நோட் 20

இந்திய விலை விவரம்:

சாம்சங் கேலக்ஸி நோட் 20 4ஜி 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 77999

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 104999

சாம்சங் கேலக்ஸி நோட் 20 4ஜி மாடல் மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களிலும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல் மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஏர்டெல், ஜியோவின் இசிம் வசதி கொண்டிருக்கிறது. விரைவில் வோடபோன் இசிம் வசதி வழங்கப்பட இருக்கிறது.

கேலக்ஸி நோட் 20 4ஜி மற்றும் நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்கள் எக்சைனோஸ் 990 பிராசஸர் கொண்டிருக்கின்றன. மற்ற சந்தைகளில் இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகை

– கேக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வோர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வாங்கவிட வேண்டும்.

பலன்களை வாடிக்கையாளர்கள் சாம்சங் ஷாப் செயலியில் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி டேப் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.

– இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 20 மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை வாங்குவோருக்கு ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

SHARE