சாந்தனுவை வாழ்த்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

83
இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்... சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்

சாந்தனு
‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘இராவண கோட்டம்’ படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. இதையடுத்து படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது.
சாந்தனுஇந்நிலையில் ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, “இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.
SHARE