பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்

73
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆவார்.

நேற்று நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் குறைந்த ரன்னில் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் அவர் உடனடியாக நியூசிலாந்து செல்ல இருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் குடும்பம் ஆகியவை இது அவரது தனிப்பட்ட விஷயம் மேற்கொண்டு ஏதும் கேட்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

கடந்த சில மார்ச் மாதத்தின் போது இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பென் ஸ்டோக்ஸின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நியூசிலாந்தில் இருந்து வருகிறார். பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE