சித்தார்த்துடன் வீடியோ காலில் பேசிய ஜெனிலியா

51
முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா

ஜெனிலியா
சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதில் சித்தார்த் – ஜெனிலியா ஜோடியின் நடிப்பு அதிகளவில் பேசப்பட்டது. இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்கள். அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’. இந்த படம் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால், இதில் ஜெயம் ரவி-ஜெனிலியா நடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் ‘பொம்மரிலு’ திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து சித்தார்த் மற்றும் ஜெனிலியா வீடியோ காலில் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இது குறித்த வீடியோவை ஜெனிலியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியில் ‘பொம்மரிலு’ படத்தில் இடம்பெற்ற பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

SHARE