2 ஆயிரத்து 902 ஆக அதிகரித்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

58

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் ஒருவர் சூடானில் இருந்தும் நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து இன்று மேலும் 79 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 136 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் 74 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE