அமேசான் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

67
அமேசான் ஊழியர்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

அமேசான்
அமேசான் நிறுவன ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களில் 1.44 சதவீதம் ஆகும்.
ஊழியர்கள் ஆரோக்கியத்துக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமேசான் தனது கிடங்குகளை திறந்து வைத்திருந்தது என ஊழியர்களால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் யூனியன்கள் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
 அமேசான் எனினும், பொது மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை விட அமேசானில் தொற்று அபாயம் 42 சதவீதம் குறைவாகவே இருந்தது என அமேசான் தெரிவித்து இருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பெருந்தொற்று காட்டுத்தீ போல் பரவ அமேசான் அனுமதித்து இருக்கிறது என தொழிலாளர் நல அமைப்பின் இயக்குனர் தான்யா ராஜேந்திரா தெரிவித்து இருக்கிறார்.
மார்ச் 1 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 வரையிலான காலக்கட்டத்தில் அமேசானில் பணியாற்றும் 13,72,000 முன்னணி ஊழியர்களில் 19,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என அமேசான் தெரிவித்து இருக்கிறது.
SHARE