விவோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

72
அசத்தல் அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

விவோ வி20
விவோ நிறுவனம் இந்தியாவில் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது.
தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது.
 விவோ வி20
விவோ வி20 சிறப்பம்சங்கள்
– 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
– 44 எம்பி பிரைமரி கேமரா
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
– டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
SHARE