ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள்

65
ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 13 ஆம் தேதி நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு ஹை ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் 12 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர பல்வேறு அக்சஸரீக்களும் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியான தகவல்களில் ஆப்பிள் நான்கு ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், இம்முறை மூன்று ஐபோன்களே அறிமுகமாகும் என தெரிகிறது. இவை அனைத்திலும் OLED டிஸ்ப்ளே மற்றும் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கின்றன.
 ஆப்பிள் மூன்று மாடல்களும் 6.1 இன்ச், 6.7 இன்ச் மற்றும் 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ மாடல்களில் LIDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ, ஹை எண்ட் ஒவர்-இயர் ஹெட்போன், ஏர்டேக்ஸ், சிறு டிராக்கிங் சாதனம், சிறிய ஹோம்பாட் மற்றும் புதிய மேக் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE