இந்தியாவில் 8கே ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்

79
பிரீமியம் விலையில் சோனி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

சோனி ZH8 8K ஸ்மார்ட் டிவி
சோனி நிறுவனத்தின் முதல் 8கே ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சோனி ZH8 டிவியில் சோனியின் எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர், டிரைலுமினஸ் டிஸ்ப்ளே, 8கே எக்ஸ்-டென்டட் டைனமிக் ரேன்ஜ் ப்ரோ, எஸ் போர்ஸ் சரவுண்ட் சவுண்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் உள்ள எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர் சோனியின் மிகவும் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். இந்த பிராசஸர் 8கே தரவுகளை மிக சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த டிவியில் ஆப்ஜக்ட் சார்ந்த சூப்பர் ரெசல்யூஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு காட்சியிலும் நிறம் மற்றும் காண்டிராஸ்ட்களை துல்லியமாக பிரதிபலிக்கிறது.
 சோனி ZH8 8K ஸ்மார்ட் டிவி இத்துடன் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டிவி என்பதால், இது ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஆப்பிள் ஏர் பிளே 2, ஹோம்கிட் மற்றும் பிஎஸ்6 ரெடி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
சோனி KD-85Z8H 8கே ஸ்மார்ட் டிவி சோனி விற்பனை மையங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
SHARE