4 மொழிகளில் உருவாகவுள்ள தனுஷின் புதிய படம்

24
4 மொழிகளில் உருவாகும் தனுஷ் படம்

தனுஷ்
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த அசுரன் பெரிய வெற்றி பெற்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கர்ணன் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஓரிரு மாதங்களில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி படமொன்றிலும் அக்‌ஷய்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர்.
ராம்குமார், தனுஷ்
இந்த நிலையில் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராம்குமார் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் தயாராகும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE