லாபம் படத்தில் தமிழ் ஈழ பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி இமான்

41
தமிழ் ஈழ பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி இமான்... குவியும் பாராட்டு

டி இமான்
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். கமர்சியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். `லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ராப் பாடலை பாட தமிழ் ஈழ பாடகி  கிலியோ என்பவருக்கு, இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் அவரை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்வதாக இமான் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள இசையமைப்பாளர் டி இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

SHARE