விரைவில் துவங்கும் அமேசான் விற்பனை திருவிழா

59
அதிரடி சலுகைகளுடன் விரைவில் துவங்கும் அமேசான் விற்பனை திருவிழா

அமேசான்
அமேசான் நிறுவனம் அதன் பண்டிகை நிகழ்வான கிரேட் இந்திய திருவிழாவினை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவித்து உள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் விற்பனையில் கலந்து கொள்ளலாம்.
உள்ளூர் கடைகள், அமேசான் லாஞ்ச்பேட், அமேசான் சஹேலி மற்றும் அமேசான் காரிகர் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான அமேசான் விற்பனையாளர்களிடம் இருந்து தனித்துவ தயாரிப்புகளை வாங்க முடியும்.
 அமேசான் வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கான டீல்களில் இருந்து ஷாப்பிங் செய்வதன் மூலம் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலும் சேமிக்க முடியும். டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டணம் இல்லா மாத தவணை வசதி, 10 சதவீத கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
SHARE