தென்கொரிய 33 மாடி கட்டடத்தில் பாரிய தீ

21

தென் கொரியாவின் உல்சான் நகரில் அமைந்துள்ள உயர்மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 88 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 33 மாடிக் கட்டடத்தில் தீப்பிழம்பு கொழுந்துவிட்டு எரியும் காட்சி வீடியோவில் பதிவானது. தீயணைப்பாளர்கள் கீழே நின்று தீயை அணைக்கப் போராடினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கட்டடத்தின் கூரை அல்லது மற்ற இடங்களுக்குத் தப்பியோடிய 77 பேரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர். சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE