ஜோனி பேயர்ஸ்டொவ் அதிரடி: பஞ்சாப் அணியை பந்தாடியது ஹைதராபாத்

20

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 69 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

டுபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 97 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 132 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஹைதராபாத் அணி 69 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 77 ஓட்டங்களையும், கே.எல் ராகுல் மற்றும் சிம்ரன் சிங் ஆகியோர் தலா 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ராஷித் கான் 3 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோனி பேயர்ஸ்டொவ் தெரிவுசெய்யப்பட்டார்.

SHARE