ஐ.பி.எல் 2020: அதிவேக அரை சத சாதனை

20

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 17 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 202 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 9 ஓட்டங்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த சிம்ரன் சிங் 11 ஓட்டங்களில் வெளியேறினோர். அப்போது பஞ்சாப் அணி 4.2 ஓவரில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். அவர் சந்தித்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். அபிஷேக் சர்மா வீசிய 7-வது ஓவரில் 2 சிக்ஸ் விளாசினார். 9-வது ஓவரை அப்துல் சமாத் வீசினார். ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ், 2-வது பந்தில் பவண்டரி, 3-வது பந்தில் சிக்ஸ், 4-வது பந்தில் சிக்ஸ் அடித்து 17 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் இது அதிவேக அரைசதம் ஆகும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிவேக அரைசதம் ஆகும்.

SHARE