சினிமாவில் இருந்து விலகும் சிம்பு பட கதாநாயகி

92

சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து 2008 ஆம் ஆண்டு வெளியான படம். இதில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை சனா கான். இவர் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் ‘தலைவன்’.

இந்நிலையில் தற்போது திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை சனாகான் அறிவித்துள்ளார். மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்றப் போவதாகவும், அந்த பதிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

எனவேதான் திரையுலகில் இருந்து தான் விலகுவதாக முடிவு செய்து விட்டதால் இனிமேல் சினிமா சம்பந்தப்பட்ட கேள்வியை தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரையுலகில் இருந்து திடீரென விலகுவதாக சனாகான் கூறியுள்ளது, ரசிகர்களுக்கும் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE